தேசிய சட்ட சேவைகள் தினம்:
தேசிய சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி மாநில அதிகாரிகளின் மூலம் கொண்டாடப்படுகிறது.
சட்டக் கல்வி சார்ந்த முகாம்கள் நாட்டின் முக்கியமான தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதித்தவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று இலவச சட்ட சேவையை துவக்கியது.
இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம்:
சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டு முதன்முதலாக கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.
முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தினத்தின்போது கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படுகிறது.