மீரா மிதுன் யாரோட செல்பி எடுத்திருக்காங்க.. பார்த்திங்களா.?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

சில நாட்கள் முன்பு சரவணன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். சேலம் அருகே நடைபெற்ற அதில் மீரா மிதுன் சேலை, தலை நிறைய பூ, பொட்டு என பக்கா ஹோம்லி லுக்கில் இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் மீரா மிதுன், தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற நடிகை சிம்ரனுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதனை பலர் வரவேற்றாலும், சிலர் சிம்ரன் கூட அழகா இருகாங்க, நீங்க தான் ஆண்ட்டி மாதி இருக்கீங்க என கிண்டல் செய்தும் கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.