தனுஷை சந்தித்த பிரமாண்ட தயாரிப்பாளர்..!!

தனுஷ் இன்று இந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த அசுரன் படத்திற்கு இந்தியா முழுவதுமே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

கண்டிப்பாக இந்த வருடத்திற்கான தேசிய விருது தனுஷிற்கு தான் கிடைக்க வேண்டும் என மற்ற மாநிலத்து சினிமா ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனுஷை சந்தித்ததாக ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகின்றது.

இது உண்மையா என்று தெரியவில்லை, அப்படி உண்மையாக இருந்தால், இவர்கள் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகிறதோ என தோன்ற வைக்கின்றது.