வங்காள விரிகுடாவில் தற்பொழுது புல்புல் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கொல்கத்தா விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கின்றது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புல்புல் புயலின் காரணமாக கடல் பகுதியில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகின்றது. எனவே, இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் சேதம் ஏற்படும் என கருதியதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது, பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.