பிக்பாஸ் முகேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனிருத்! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்ததை பாருங்க

பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் முகின் ராவ்வுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. பிக்பாஸ் பைனலில் அவருக்கு மிக அதிக அளவில் ஓட்டுகள் குவிந்தது அதற்கு சாட்சி.

இன்று விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 7 இறுதி போட்டிக்கும் முகின் வந்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத்தும் வந்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆன நிலையில் முகீனுக்கு சினிமா வாய்ப்பு வழங்கவேண்டும் என்று பலரும் தனக்கு மெசேஜ் செய்வதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

மேலும் “ரெண்டு பேரும் சேர்ந்து பாடுவோம்” என கூறி அனிருத் மேடைக்கு சென்று முகினுடன் ஒரு பாடல் பாடினார்.