மனைவியை இயற்கைக்கு மாறாக தாம்பத்தியம் மேற்கொள்ள சொல்லி வற்பறுத்திய கணவன் மற்றும் குடும்பத்தினர்.! அரங்கேறிய சோகம்.!!

துச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதிநகர் பகுதியை சார்ந்த பெண்மணி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். திருக்கோவிலூர் பகுதியை சார்ந்த பொறியாளரின் பெயர் கார்த்திக் (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த சில நாட்களில் கார்த்திக்கின் மனைவியுடைய கீழையூரில் வசித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., கார்த்திக்கின் மனைவிக்கு சரிவர சமையல் செய்ய தெரியவில்லை என்று கூறி கார்த்திக்கின் தந்தையான கோவிந்தராஜ் மற்றும் கார்த்திக்கின் தாயார் மல்லிகை அவதூறான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.

இந்த தருணத்தில்., கார்த்திக்கிற்கு சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே., இதனை மனைவியிடம் தெரிவித்து சென்னைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். சென்னையில் சென்று வீடு தேடுவதற்கு ரூ.2 இலட்சம் பெண்ணின் வீட்டில் தரப்பில் வாங்கி வர கூறி மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட மனைவியும் தனது கணவருக்கு பணம் வாங்கி கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்று வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில்., கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரி ஸ்ரீப்ரியா சென்னைக்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில்., வீடு சரியில்லை என்று கூறி கார்த்திக்கிடம் அவரது பெற்றோர்கள் முறையிடவே., இதனை கேட்டு ஆத்திரமடைந்த கார்த்திக் மனைவியை அவதூறாக திட்டியுள்ளார்.

மேலும்., காம கொடூரனின் அலைபேசியில் உள்ள ஆபாச வீடியோ காட்சிகளில் உள்ள பதிவுகள் போல நடக்க சொல்லி கூறியுள்ளான். இதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே., மனைவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டுள்ளான். இத்னால் பயந்துபோன மனைவி., கணவனின் பேச்சுக்களை கேட்டு பல சித்திரவதைகளை உடலளவில் அனுபவித்த நிலையில்., இவரின் அலறலை கார்த்திக் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளான்.

கணவனின் அலைபேசியை எதிர்ச்சியாக உபயோகம் செய்த மனைவிக்கு வீடியோ காட்சி குறித்த பேரதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்த நிலையில்., பெண்ணை கொலை மிரட்டல் விடுத்து., தனியறையில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர். இதனை பெண் அலைபேசி மூலமாக பெற்றோருக்கு தெரிவித்து கதறியழுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கார்த்திக்கின் இல்லத்திற்கு சென்று நியாயம் கேட்ட சமயத்தில்., ரூ.5 இலட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். தனது மகளை தன்னுடன் அழைத்து செல்கிறோம் என்று பெற்றோர்கள் தெரிவித்து அழைத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிந்தராஜ்., மல்லிகா மற்றும் ஸ்ரீபிரியாவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகை தற்போது கைது செய்துள்ள நிலையில்., தலைமறைவாக இருக்கும் மூவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.