வவுனியா கனகரயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் 23 வயதான பாலசுப்பிரமணியம் தர்மிலன் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இளைஞனே மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் , இளைஞனின்
பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர் சென்ற காட்டு பகுதியில் இளைஞர்கள், மற்றும் பொலிசார் தீவிர தேடுதல் நடாத்தியிருந்த போதும் நேற்று இரவு 11 மணிவரை அவரை கண்டறிய முடியவில்லை.
இந்த சம்பவத்தில் மாயமான இளைஞர் யாழ் பல்கலைகழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.