இந்தியாவில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ. 2.5 கோடி பரிசு விழுந்த நிலையில் ஒரே இரவில் கோடீஸ்வரராக ஆகியுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்.
இவர் பெயிண்டராகவும், பிளம்பராகவும் வேலை செய்து வந்தார். சஞ்சீவ்குமாருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரான சஞ்சீவ்குமாருக்கு அன்றைய தினம் வேலை இருந்தால் தான் தினம் வருமானம் கிடைக்கும்.
இந்நிலையில் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சஞ்சீவ்குமார் இரண்டு லொட்டரி சீட்டுகள் வாங்கினார்.
இதில் ஒரு சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ. 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து பேசிய சஞ்சீவ்குமார், பரிசு பணத்தை என் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை அளிக்க பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.
பரிசுகளை பெறுவதற்கான ஆவணங்களை சஞ்சீவ்குமார் லொட்டரி நிறுவனத்திடம் அளித்துள்ள நிலையில் விரைவில் அவரிடம் பணம் வழங்கப்படவுள்ளது.