பிரபல இயக்குனர் மரணம்!

இயக்குநர் ருத்ரையாவின் “அவள் அப்படித்தான்” படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குனர் அருண்மொழி வயது 49.

தமிழ் சினிமா கலைஞர்களுக்கு மிகவும் பரிட்சயமான இவர் காணிநிலம், நாசர் கதாநாயகனாக நடித்த ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நிலமோசடி, மூன்றாவது இனம், இசைவானில் இன்னொன்று போன்ற குறும்படங்கள் எடுத்துள்ளார். எப்போதும் படைப்புகளை சார்ந்தே வாழ்ந்து வந்த இவர், பல மாணவர்களுக்கு இதுகுறித்து படம் எடுத்து வந்தார்.

இந்நிலையில் ஜப்பானிய திரைப்பட விழாவில் திடீரென்று  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.