தனது ‘பிகில்’ ஜெர்சியை பிரபல நடிகருக்கு கொடுத்த விஜய்..!

விஜய் நடித்து வெளியான படம் பிகில் . இந்த படத்தில் இவர் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். அதில் கால் பந்து பயிற்சியாளராக வரும் பிகில் என்னும் கதாபாத்திரத்தில் அணிந்திருக்கும் ஜெர்சியை நடிகர் ஒருவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் விஜய்.

சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி, பிகில்  படங்களில் நடித்தவர் நடிகர் நடிகர் சவுந்தர்ராஜா. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறித்து சமீபத்தில் பிகில்  ஆடியோ விழாவில் விஜய், புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில் நடிகர் சவுந்தர்ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், விஜய் பிகில்  படத்தில் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த முக்கியமான பரிசு இதுதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.