முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான றெஜினோல்ட் (28) தெரியவந்துள்ளது.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த மீனவர்களின் படகு இயந்திரம் கடலில் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்தி அவர்களுக்கு உதவி செய்யும் செய்யும் முகமாக குறித்த குடும்பஸ்தர் கடலில் சென்று குறித்த வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்தியுள்ளார்.
இதன் போது குறித்த வெளி இணைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அதிக குதிரை விசை கொண்ட எஞ்சின் என்பதால் ஸ்ராட் எடுக்கும் பகுதியில் உள்ள ப்ளைவீல் உடைந்து கூறிய தகடு பாய்ந்து கை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குறித்த குடும்பஸ்தரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.