பிக் பாஸ் தர்ஷனின் காதலிக்கு நடிகர் சிம்பு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் சமீபத்தில் பிரிந்து விட்டனர் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தர்ஷன் கூட பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில் சிம்பு சனம் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியுடன் நடிகர் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் சிம்பு அவரின் இன்ஸ்ட்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.