கார் குண்டு வெடித்து பரிதாப பலியான மக்கள்.! அரங்கேறிய சோகம்.!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்., அப்பாவி பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களை குறைக்கும் பொருட்டும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படைகளை ஒன்றிணைந்து., வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்திற்கும் – இராணுவ படையினருக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் கொடூர தாக்குதலானது அரங்கேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகரில் இருக்கும் காசிம் தெருவில் காரில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டானது பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும்., 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு துடித்த நிலையில்., இந்த செய்தியை அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும்., இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.