தாய் உல்லாசம் அனுபவித்ததை நேரில் கண்ட சிறுமி.! அரங்கேறிய பெரும் சோகம்.!!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடா பகுதியில் அனில் மற்றும் ராமனாம்மா என்ற தம்பதிகள் இரு மகன்கள், 7 வயது மகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மக்கள் பெயர் துவாரகா. மதுபானக் கடை ஒன்றில் அனில் வேலைப்பார்த்து வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென துவாரகா காணாமல் போய் இருக்கின்றார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் குடி இருந்த பிரகாஷின் மனைவி வெளியூருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தங்களுடைய வீட்டில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

சந்தேகப்பட்டு அவிழ்த்து பார்த்த போது காணாமல் போனதாக கூறப்பட்ட பக்கத்துவீட்டு சிறுமி துவாரகா சடலமாக அதில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பதறியடித்து காவல் துறைக்கு அவர் தகவல் அளித்தார். பின்னர் காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், பிரகாஷ், நானும் துவாரகாவின் தாய் ராமானம்மாவும் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தோம். கொலை நடந்த அன்று நானும், ராமணம்மாவும் உல்லாசம் அனுபவித்ததை துவாரகா பார்த்துவிட்டார். எனவே தான் இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து துவராகவை கொன்று விட்டோம்.” என கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.