கர்மச் சனி :
ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும்.
இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும்.
குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.
தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் இலாபம் உண்டாகும்.
மற்றவர்களால் அவச்சொல்லிற்கு ஆளாகுவீர்கள்.
வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது.
யோகச் சனி :
ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது யோகச் சனியாகும்.
பெயருக்கு ஏற்றாற்போல் யோகத்தை அளிக்கக்கூடியவர்.
இந்த காலக்கட்டத்தில் காரியசித்தி உண்டாகும்.
தனவரவின் அதிகரிப்பால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
மூத்தவர்கள் உறுதுணையாக இருந்து பல வகைகளில் ஆதரவாக இருப்பார்கள்.
இழந்த பொருட்களை மீட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
விரயச் சனி :
ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது விரயச் சனியாகும்.
இந்த காலங்களில் பெரிய அளவிலான செலவுகள் ஏற்படும்.
ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.
பொன், பொருள் போன்றவை திருடு போகும். பல செலவுகள் ஏற்படும்.
சுயதொழில் எதிர்பார்த்த இலாபத்தை தராது. வேலையாட்களால் பிரச்சனை உண்டாகும்.
குடும்பத்தில் விரோதம் ஏற்பட்டு பிரிவு உண்டாகும்.
இந்த காலங்களில் யாருக்கும் ஜாமின் போடாமல் இருந்தால் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.