இணையத்தில் ராமரை அவமதித்த இளைஞர்..! கைது

சமூக வலைத்தளங்களில் இந்து மத கடவுளான ராமர் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்களை வைத்து புகைப்படத்தை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதி கொடுத்தது. தற்பொழுது விரைவாக ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றது.

இந்த தீர்ப்பினை முன்னிட்டு முகநூல் வாட்ஸ் அப் மற்றும் பல சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை காவல்துறையும் கண்காணித்து வந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ராமர் குறித்து மிகவும் மோசமான படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே 70க்கும் மேற்பட்டோர் தவறான தகவல்களை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.