ஆண் வேடத்தில், பெண்களை சீரழித்த பெண்மணி..!

ஆந்திராவில் ஆண் வேடமிட்டு பெண் ஒருவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவமானது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பிரகாசம் மாவட்டத்தில் 32 வயதான பெண்ணொருவர் ஆணை போல வேடமிட்டு, மைனர் பெண்களை மயக்கி அழைத்துச் சென்று அவர்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். மேலும் 17 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்ளவும் முயற்சித்துள்ளார்.

17 வயது பெண்ணிடம் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று மூவரும் ஒன்றாக சந்தோசமாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கின்றார். ஆனால், அந்த பெண் இதற்கு மறுத்து தன்னுடைய பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்ததால் இந்த சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினர் ஆண் போல வேடமிட்டு ஏமாற்றிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர். ஆண் வேடமிட்டு பல பெண்களை மோசம் செய்த பெண்ணின் 3 வது கணவர் அதிர்ச்சியில் துக்கம் தாங்காமல் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.