தமிழ் திரையுலகில் ‘மைனா’ என்ற படத்தின் முலம் பிரபலமானவர் நடிகை ‘அமலா பால்’. மைனா படத்திற்கு பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக மாறிவிட்டார் அமலா. மேலும், இவர் பிரபல இயக்குனர் ‘ஏ.எல்.விஜய்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இடையே நடந்த கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இதன்பின் நடிப்பில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தி வருகிறார் அமலா. மேலும் அண்மையில் இவர் நடித்த ‘ஆடை’ படம் பெரிதளவில் சர்ச்சையில் சிக்கியது. ஆனால் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தின் முலமாக சில இடங்களில் அமலாவிற்கு கெட்ட பெயர் கிடைத்திருந்தாலும், பெரிதளவில் ரசிகர்களிடையே நல்ல பெயரும் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அமலா அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என்று இவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அமலா பால் மீண்டும் கவர்ச்சியான சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கவுள்ளாராம். ஆம், ஹிந்தியில் சென்ற ஆண்டு ‘நெட்பிளிக்ஸ்’ என்ற இணையதளத்தில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தை தெலுங்கு ரீமேக்கில் அமலா நடிக்க போகிறாராம். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ‘கியாரா அத்வாணி’ நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன சர்ச்சைக்குரிய விஷயம் என்றால் இந்த படம் பெண்களுக்கு காமத்தின் மேல் உள்ள ஈடுபாட்டை கூறும் படமாகும். மேலும் இந்த படத்தில் இடம் பெரும் காட்சி ஒன்றில் ’அம்மா அப்பா முன்பு சுயஇன்பம் கொள்வது போல் கியரா அத்வாணி முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியாக நடித்திருப்பார்’. தற்போது இந்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கும் போது அந்த சுயஇன்பம் காட்சியை நடிப்பாரா என்று இவரது ரசிகர்கள் இணையதளங்களில் கேட்டு வருகிறார்கள்.