தமிழகத்தில் நண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவரது கணவர் தச்சு வேலை செய்து வருகிறார். முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக இளம்பெண் தீபாவை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தீபாவின் கணவர் வேலை காரணமாக கடந்த ஜுலை மாதம் வெளியூர் சென்றுவிட்டு 2 மாதம் கழித்து ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது மனைவி தீபாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் இல்லாததால், இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது தீபா,
உங்கள் நண்பரான அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (30), நீங்கள் வெளியூர் சென்ற பிறகு சாமி பிரசாதம் என்று கேசரியுடன் சாக்லெட் ஒன்று கொடுத்தார்.
நான் அதை சாப்பிட்ட பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண்விழித்து பார்த்த போது, நான் நிர்வாணமாக இருந்தேன். அப்போது வினோத்குமார் ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி 3 சவரன் செயினை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின் பொலிசார் வினோத்குமாரை பிடித்து விசாரித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், தீபாவின் கணவருக்கு 40 வயது, அதோடு அவர் தச்சு வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால், வீட்டின் அருகே இருக்கும் கணவரின் நண்பர் வினோத்திடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இதையடுத்து வினோத் அவசர செலவுக்காக தீபாவிடம் அவர் அணிந்திருந்த 3 சவரன் நகையை வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் வினோத்குமார் நண்பர் சதீஷ்குமாருக்கு தீபா மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், வினோத்குமாரிடம் தீபாவுடன் ஒன்றாக இருக்க ஏற்பாடு செய்யும்படி கேட்க, அதற்கு அவள் ஒத்து கொள்ளாமாட்டாள், இதே ஒரே வழி மயக்க சாக்லெட் கொடுத்து தீபாவுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் வீட்டின் அருகே உள்ள புற்று கோயில் திருவிழா நடந்தபோது தீபாவின் கணவர் வெளியூரில் இருந்ததால், அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட வினோத்குமார் தீபா வீட்டிற்கு சென்று கோயில் பிரசாதம் என்று, கேசரியுடன் மயக்க சாக்லெட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
அதை நம்பி வாங்கி சாப்பிட்ட பின்பு, தீபா மயக்கமடைந்துள்ளார். அதன் பின் சதீஷ் திட்டமிட்டபடி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அப்போது இதனால் எதுவும் பிரச்சனை வந்துவிடும் என்பதற்காக, சமாளிக்கும் வகையில் இருவரும் ஒன்றாக இருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அதன் பிற்கு கண்விழித்து பார்த்த போது, உடன் வினோத் இருந்ததால், அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து வெளியூருக்கு வேலைக்கு சென்ற கணவன் சில நாட்களில் வரவிருப்பதால், தான் கொடுத்த 3 பவுன் நகையை வினோத் குமாரிடம், தீபா கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, வினோத் உடனே அவர் தினேஷிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.
நாங்கள் கூறுவது போன்று தான் நீ நடக்க வேண்டும் என்று கூறி, அவரை மிரட்டி பல முறை இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இருவரும் தனது நண்பர்களுடனும் ஒன்றாக இருக்கும்படி கூறி வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர்.
வெளியில் தெரிந்தால் அவமானம் என்று தீபா, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், 3 சவரன் செயினை வினோத்குமாரிடம் தீபா கொடுத்ததால், மூன்று சவரனுக்கான 90 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று பொலிசார் கூற, அதன்படி, காவல் நிலையத்தில் வினோத்குமார் 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் பணத்தை 10 நாட்களில் தருவதாக ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
ஆனால், 10 நாட்கள் கடந்த நிலையில் வினோத்குமார் பணத்தை திரும்ப கொடுக்க வில்லை. விருகம்பாக்கம் போலீசாரும் பணத்தை பெற்று தரவில்லை.
இதனால் தீபா மற்றும் அவரது கணவர், நேற்று முன்தினம் தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர்.