பிரபல நடிகரான இதயம் முரளியின் மகன் தான் இளம் நடிகர் அதர்வா. இவர் பானா காத்தாடி என்கிற படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதற்கு பிறகு நிறைய நல்ல நல்ல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பரதேசி, இரும்பு குதிரை, ஈட்டி, கணிதன், இமைக்க நொடிகள், 100 போன்ற ஹிட் படங்களை நடித்து வருகிறார் அதர்வா. இதற்கு நடுவில் இவர் நடித்த படம் தான் ‘செம போத ஆகாதே’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்படவில்லை மற்றும் திரையரங்குகளில் கூட பெரிதளவில் ஓடவில்லை.
இதனால், அந்த படத்திற்கு நடந்த விநியோக நஷ்டத்திற்கு ருபாய் 6 கோடிக்கு அதர்வா பொறுப்பேற்று கொள்கிறேன் என்று வாக்களித்திருந்தார். மேலும், இதற்கு 6 கோடிக்கு பதிலாக ‘மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடித்து தருவதாக கூறியிருந்தாராம்.
ஆனால், அந்த படத்தில் நடிக்காமல் ஏமாற்றிவிட்டாராம். இதன்பின், அதர்வாவின் மீது ‘எக்ஸ்ட்ரா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் முதலாளி மதியழகன் காவல் நிலையத்தில் அதர்வா மீது புகார் அளித்துள்ளாராம்.