இந்தியா வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆனது என்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுள் ஹக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதனையடுத்து இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா உமேஷ் யாதவ் முகமது ஷமி ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை எடுக்க வங்கதேச அணி உணவு இடைவேளைக்கு முன்பு வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன் பிறகு வங்கதேச அணி ஆட்டம் தொடங்கிய பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் அந்த அணியின் கேப்டன் மொமினுள் ஹக் ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த விக்கெட்டானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய மண்ணில் அவரது 250-வது டெஸ்ட் விக்கெட் ஆக பதிவானது.
இதன்மூலம் குறைந்த போட்டிகளில் உள்நாட்டில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சுழல் ஜாம்பவான் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் உடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முரளிதரன் 42 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினும் 42 போட்டிகளில் நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 43 போட்டிகளில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளராக ஹெராத் 46 போட்டிகளிலும், தென்னாபிரிக்காவின் ஸ்டெய்ன் 49 போட்டிகளிலும், இந்தியாவின் ஹர்பஜன்சிங் 51 போட்டிகளிலும் இந்த சாதனை நிகழ்த்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது