சென்னையில் அனகாபுத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம் பெண் ஆரோக்கியராஜ் என்ற நபரை காதலித்து, கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணமான நாளில் இருந்து ஆரோக்கியராஜ் அன்றாடம் குடித்து விட்டு வந்து ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
9 மாதங்களாக பொறுத்துக்கொண்ட ஐஸ்வர்யா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, காவல்நிலையத்தில் ஆரோக்கியத்தின் மீது புகார் அளித்துள்ளார். தனது மனைவி காவல் நிலையத்திற்கு செல்வதை அறிந்த ஆரோக்கியராஜ் அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்தை வந்தடைந்தார்.
என் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப் போகிறாயா? நீ புகார் அளித்தால் நான் செத்துப் போய் விடுவேன் என்று தன்னுடைய கையில் பிளேடால் காவல் நிலையத்திலேயே அறுத்துக்கொண்டுள்ளார்.
இதனைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரிடமிருந்த பிடுங்கி அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.