ஈழத்தை பொறுத்த வரையில் ஒருகாலத்தில் தங்களது மகளுக்கு மருத்துவரை திருமணம் செய்து வைத்துள்ளோம், பொறியியலாளரை திருமணம் செய்து வைத்திருக்கிறோம் எனவும் இன்னும்பல சமூகத்தில் அந்தஸ்தில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்படுவார்கள் பெற்றோர்கள்.
ஆனால் இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் எனது மகளை லண்டனில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம், பிரான்சில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.
இந்த போக்கு சரியா? தவறா? என விமர்சிக்கவில்லை ஆனால் பிள்ளைக்கு விருப்பமில்லாமல் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளையை தாங்கள் பெருமையாக மார்தட்டிக்கொள்வதற்காக மூளைச்சலவை செய்து யாரென்றே தெரியாத வயது வித்தியாசம் கூட பார்க்காது வெளிநாட்டு நபரொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என சிலாகித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் படும் பாடு யாருக்கு தெரியும்.. அதை உணர்த்தும் விதமாகத்தான் பிரான்சிலிருந்து ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
அதில் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸை சேர்ந்த நபரொருவரை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார், அந்தப்பெண்ணுக்கு அந்த நாட்டில் அவரது கணவனை தவிர யாரையும் தெரியாது, இந்நிலையில் கணவனோ ஒவ்வொருநாளும் குடித்துவிட்டு சந்தேகப்பட்டு அந்த பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து வருகின்றார் அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.