பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சில நாட்களில் அதிக சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை மீரா மிதுன்.
அவர் வெளியே வருவதற்கு முன்பே அவரைப்பற்றிய பல மோசடி செய்திகள் வெளியாகி வந்தவண்ணம் இருந்தன. அவர் வந்த பின்னும் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன.
இவரும் விடாமல் பலரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார். சிஸ்டம் சரியில்லை, ஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு இப்படி அநீதி நடக்குமா என்றெல்லாம் புலம்பியிருந்தார்.
இதுஒருபுறமிருக்க, கவர்ச்சியான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் ஷாக் ஆகியிருப்பார்கள்.
இந்த நிலையில் அவருக்கும் லஞ்ச ஒழிப்பு கமிஷனில் இருந்து தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் என்ற பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் அவரே அடையாள அட்டையையும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்புதுறையில் மீராவுக்கு இவ்வளவு பெரிய பதவியா என்று நெட்டிசன்கள் ஷாக்கில் உள்ளனர்.
I am now the Director for Chennai Tamilnadu State in Anti-corruption commission ( A.C.C ), no one can hide hereafter and i am watching. Ini odavum mudiyathu oliyavum mudiyathu @pinkvilla So join hands with me to bring a new age of corruption free State. @IndiaToday @THNewDelhi pic.twitter.com/pMKPvUJY2u
— Meera Mitun (@meera_mitun) November 14, 2019