இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘தளபதி’ என்கிற திரைப்படம் முலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. பின்பு ரோஜா, பாம்பே, இந்திரா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரொமான்டிக் ஹீரோவாக பிரபலமானார்.
சில காலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘கடல்’ படத்தின் முலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி. இதற்கு பிறகு தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மற்றும் செக்கச்சிவந்த வானம் போன்ற ஹிட் படங்களை நடித்து வந்தார்.
இந்நிலையில் ‘ஏ.எல்.விஜய்’ இயக்கி வெளிவர இருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ‘செல்வி ஜெயலலிதா’ அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளார். ‘தலைவி’ என்கிற படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த்சாமி. மேலும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திருக்காக மீசை தாடியை கிளீன் ஷேவ் செய்து ஆள் அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார் அரவிந்த்சாமி.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது..