விகாரி ஆண்டு – ஐப்பசி 30 – சனிக்கிழமை (16.11.2019)
நட்சத்திரம் : மிருகசீரிஷம் அதிகாலை 0.04 வரை பின்னர் திருவாதிரை
திதி : சதுர்த்தி இரவு 7.20 வரை பின்னர் பஞ்சமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மாலை 4.45 – 5.45
சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தவும். வெளியிடங்களில் எப்போதும் உஷாராக இருக்கவும். பழைய இனிய நினைவுகள் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கு திரும்ப கிடைக்கும். சேமிப்பு பணம் இக்கட்டான நேரத்தில் செலவுக்கு பயன்படும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசி அன்பர்களே, குடும்ப விவகாரத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்தது போலவே நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். உடன்பிறப்பு வகையில் சில மனக்கஷ்டம் வரலாம். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்களிடம் விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படும்
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய உறுப்பினர்களின் யோசனையை ஏற்றுக்கொள்ளவும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப அந்தஸ்த்து, கௌரவம் உயரும். மனதில் உற்சாகமும் சந்தோசமும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புது வாகனம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களே, புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். உறவினர்களால் சில மனசங்கடங்கள் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
மீன ராசி
மீன ராசி நேயர்களே, குடும்ப தேவைக்கான செலவுகள் கூடும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மன கசப்பு மாறும். தொழில், வியாபாரம் விரிவடையும்.