நடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்

மக்களின் நாயகன் நடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் கல்யாண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையை தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் விதமாக நடித்து வளர்ந்து வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிகனாக இருப்பதாலே இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உருவானது.

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஏழைய எளிய மக்களுக்கு உதவும் மனம் கொண்டவர். இந்நிலையில் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடியதை அவரது குழந்தைகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் அம்மா அப்பா எனவும் குறிப்பிட்டுள்ளனர்.