தமிழ் திரையுலகில் கவர்ச்சிக்கு பேர் போனவர் தான் நடிகை ‘நமிதா’. இவர் 2004 ஆண்டு வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ என்ற படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதற்கு பிறகு இவரது நடிப்பாலும் மற்றும் கவர்ச்சியான நடனத்தினாலும் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
மேலும், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார் நமிதா. இதன்பின். உடல் எடை அதிகமான காரணத்தினால் படம் நடிப்பதை தவிர்த்து வந்தார் நமிதா. வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நமிதா. இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார். ஒருகாலத்தில் கால்ஷீட் கிடைக்காத அளவிற்கு பிசியாக இருந்த நமிதா தற்போது தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புகள் கேட்டு வருகிறாராம்.
இதற்கு சமிபத்தில் நமிதா அவரது இணையதள பக்கமான இண்ஸ்டாகிராமில் முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டது தான் காரணம் என்று சில செய்திகள் கசிந்து வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘என்ன நமிதா திருமணம் ஆனதை மறந்து விட்டீர்களா, பட வாய்ப்புக்காக எது வேண்டுமானாலும் பண்ணலாமா’ என்று நமிதாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக ஷார் செய்யப்பட்டு வருகிறது.