me too நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க.!

me too இயக்கத்தின் மூலமாக பாடகி சின்மயி பல சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாடுகளில் அடுக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களுக்கும் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் குறித்தும் சின்மயி நீதி கேட்டு கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இவர் மீது விளம்பரத்திற்காக அவர் அவ்வாறு கூறுவதாக குற்றச்சாட்டுகள் வந்தது. இந்நிலையில் சின்னத்திரை தொடர் ஒன்றில் பெண் ஒருவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிவதை கண்டு நடிகர் ஒருவர் மிகவும் ஆவேசமாக பேசி இருக்கும் காணோளியை குறிப்பிட்டு உடை அணிவது அவரவர் விருப்பம் என கருத்து தெரிவித்தார்.

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், சிலர் தன்னுடைய கணவர் 60 வயது நடிகரை தன்னுடைய மகள் வயதில் நடிகைகளுடன் ஆபாசமாக நடிக்க வைத்த திரைப்படங்களை இயக்கிய போது பரபரப்பாக விளம்பரம் செய்தார். அப்போதெல்லாம் பெண்ணுரிமை பற்றி உங்களுக்கு தெரியவில்லையா என்று விமர்சித்து வருகின்றனர்.