வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 493 ஓட்டங்களில் டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நவம்பர் 14ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதன் பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மயங்க் அகர்வால் (243), ரோகித் சர்மா (6), புஜாரா (54), கோஹ்லி (0), ரஹானே (86), ஜடேஜா (60)*, சாஹா (12), உமேஷ் யாதவ் (25)* ஓட்டங்கள் எடுத்தனர்.
வங்கதேச தரப்பில் Jayed 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில், 3வது நாளான இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் எடுத்திருந்த 493 ஓட்டங்களுடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
தற்போது, இன்றுடன் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில் 343 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய வலுவான நிலையில் உள்ளதால் வெற்றிப்பெற அதிகவாய்ப்பு உள்ளது.