டார்லிங் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு இணையாக நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பின்னர் ஜிவி பிரகாஷ் உடன் சேர்ந்து அடுத்தடுத்த படங்களும், காஞ்சனா உள்ளிட்ட திரில்லர் படங்களிலும் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தார். அவ்வப்போது ஹாட்டான உடையுடன் வலம் வருவார் நிக்கி கல்ராணி.
இந்நிலையில், அவர் நடிக்கும் மலையாளப் படத்தின் இயக்குனர் ஓமர் லூலூ மற்றும் கதாநாயகன் அருண் ஆகியோர் மேடையில் இருந்த பொழுது நிக்கி கல்ராணியின் அறிவிப்பாளர், காதல் அனுபவம் இருக்கா என்று கேட்க, அதற்கு நிக்கி கல்ராணி தன்னுடைய பதிலை மேடையிலேயே வெளிப்படையாகக் கூறினார்.
தனக்கு அனுபவம் இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் அவரை எங்கு சந்தித்தீர்கள் என்ற கேள்விக்கு சரியான பதிலை அவர் கூறாமல் அவர் சென்னையில் இருக்கின்றார் என்று மட்டும் தெரிவித்தார். திருமணம் எப்பொழுது என்ற கேள்விக்கு மூன்று வருடங்கள் கழித்து என்று பதில் கூறி உள்ளார்.
அதன் பின்னர், தன்னுடைய காதலனை எங்கே சந்தித்தார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல நிக்கிகல்ராணி குறித்து தற்போது பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றது. சிலர் அவரை அவர் பதில் கூற மறுக்கும் பொழுதே சினிமாவில்தான் நடித்திருப்பார் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் கூறிவருகின்றனர்.
ஹாட்டான உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நிக்கி கல்ராணிக்கு நிஜவாழ்வில் ஜோடியாக வரப் போகிறவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.