தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு.
செய்முறை :
சர்க்கரைவள்ளி கிழங்கை இட்லி தட்டில் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகத்தைப் போட்டு பொரிந்தவுடன் முதலில் கறிவேப்பிலை பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதில் நசுக்கிய இஞ்சி பூண்டைப் போட்டு மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு எல்லா பொடிகளையும் சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கிவிட்டு கிழங்கை போடவும்.
கிழங்குடன் உப்புத்தூளைப் போட்டு நன்கு கிளறிவிட்டு, கலவையை அடுப்பில் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்திருந்து நன்கு கிளறிவிட்டு, கடைசியில் கொத்தமல்லித் தழையை தூவி இறக்கிவிடவும்.