பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஸ்வேதா திவாரி, இவர் நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் இன்னும் பிரபலமானார். இவர் நடிகரான ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பின் நடிகர் அபினவ் கோலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா திவாரி. இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது தனது இரண்டாவது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அபினவ்வை கைது செய்தனர்.
தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசித்து வரும் ஸ்வேதா திவாரி, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தனது திருமண வாழ்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள அளித்த பேட்டி பின் வருமாறு, எனது கணவரை பிரிந்த பிறகு நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கையானது ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமியானது தினமும் என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. தற்போது அந்த கிருமியை அறுவை சிகிச்சை மூலமாக வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால் நான் அப்படி அல்ல எனக்கு தைரியம் உள்ளது என இரு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற ஸ்வேதா திவாரி கூறியுள்ளார்.