இந்தியாவை பகைத்துக் கொண்ட பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தைத் தடை செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது. இதனால், அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த சர்ச்சையிலிருந்து இந்தியா- பாகிஸ்தானுக்கு இருந்து வந்த ராஜாங்க மற்றும் வணிக உறவுகள் அனைத்தையும் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் துண்டித்து விட்டதாக அறிவித்தார்.

இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு எந்த பொருள்களையும் ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்று கூறியதால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த அனைத்து வணிகங்களும் நிறுத்தப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவது என்னமோ பேரீட்சை, அத்தி, அன்னாசிப்பழம், வெண்ணெய், கொய்யா, மாம்பழம் மற்றும் உலர்ந்த – சிமென்ட் போன்றவை தான். ஆனால், இந்தியாவிலிருந்து ஒரு நாளைக்கு 70 முதல் 100 லாரி தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

வணிக உறவு வேண்டாம் என்று கூறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டார். இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படாததாலும் அந்த நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, தக்காளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.170 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் பெரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் திணறி வருகிறார்.