கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்! அதிரடி கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி!

சென்னை: நிச்சயம் அரசியலுக்கு வருவேன், தமிழ்நாட்டிற்குதான் என்னுடைய சேவை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார். தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறினார்.

தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை கூறி வருகின்றார். இதனால் தொடர்நது டைம்லைனில் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி பெயரில் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் வைரலானது. இதுகுறித்து விளக்கமளிக்க சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்ரீரெட்டி.

அப்போது அவர் பேசியதாவது, சினிமாவில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். எனக்கு தமிழ் திரையுலகினர் ஆதரவு தர வேண்டும். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு உள்ளதால்தான் ஹைதராபாத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருக்கிறேன்.

நிறைய தவறுகள் செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். திரையுலகில் பெண்களை தவறாக பயன்படுத்துவதால் தான் தெலுங்கு திரையுலகினர் மீது புகார் அளித்தேன்.

விரைவில் என்னுடைய அரசியல் அரங்கேற்றம் இருக்கும். தேசிய கட்சியா லோக்கல் பார்ட்டியா என்பது கட்சியில் சேரும்போது அவர்களின் முன்னிலையில் அறிவிக்கப்படும். எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்.


நான் அங்கு இருக்கும்போதே கூறியிருக்கிறேன், ஜெயலலிதா போன்று ஒரு இரும்புப் பெண்மணி கிடைப்பது கஷ்டம். அவர் இப்போது இல்லை. நான் தமிழ்நாட்டிற்குதான் சேவை செய்ய விரும்புகிறேன்.


தமிழ்நாட்டில்தான் நிறைய ஏழை மக்கள் உள்ளனர். அதனால் இங்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆந்திராவில் எனக்கு எம்பி சீட் கிடைத்தது. ஆனால் அதனை நான் உதறிவிட்டேன். எனக்கு தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.