சென்னை: பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் மட்டும் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப் படுகிறாராம் நடிகை தமன்னா.
விஷால் ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ள ஆக்ஷன் படம் நேற்று ரிலீசாகியுள்ளது. இடையில் சில காலம் பாகுபலி, தேவி என நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, கவர்ச்சிக்கு தடை விதித்திருந்தார் தமன்னா.
மீண்டும் ஆக்ஷன் படம் மூலம் தனது கொள்கையை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் லிப் லாக் காட்சிகளுக்கு மட்டும் கறாராக நோ சொல்லி விடுகிறாராம் தமன்னா.
தான் ஒப்பந்தம் செய்யப்படும் போதே இந்த ஒரு கன்டிசனை மட்டும் தெளிவாகச் சொல்லி விடுகிறாராம். அது ஏன் லிப் லாக் காட்சிகளிலேயே நடிக்க மாட்டீர்களா எனக் கேட்டால், ‘நான் அப்படியாச் சொன்னேன். ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் நான் விதியை மாற்றிக் கொள்வேன். அவருடன் நடிப்பதென்றால் லிப் லாக் காட்சிக்கு டபுள் ஓகே’ என்கிறார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், “நான், திரைப்படங்களில் முத்தம் கொடுக்க மாட்டேன். எனது ஒப்பந்தத்திலும் அது குறித்து தெரிவித்து விடுவேன். ஆனால், ஹிரித்திக் ரோஷனுக்கு மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிப்பேன்” எனப் பேசியுள்ளார்.
தமன்னா இப்படிக் கூறுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதும் இதையே தான் தமன்னா கூறியிருந்தார். தமன்னா ஹிரித்திக்கின் தீவிர ரசிகை. அதனால் தான் அவருக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் சலுகை.
ஆனால் இதுவரை அவருடன் தமன்னா ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. அவரும் ஏதேதோ ஆஃபர் வழங்கித்தான் பார்க்கிறார். ஆனால், ஹிரித்திக்கை இயக்கும் இயக்குநர்கள் தான் தமன்னாவை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.