யாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளது.
இந்த தேர்தல் இலங்கையை இனங்களாக பிளவுபடுத்தியது என்பதை, தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. கோட்டாபய சிங்கள வாக்குகளை திரட்ட முயல, அது தமிழ் மக்களிடமிருந்து அவரை தள்ளி வைத்துள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவரது நடத்தையும் அவரை தமிழர்களிடமிருந்து தள்ளி வைத்துள்ளது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகள் கூட தற்பேது கிடைக்கவில்லை. தற்போது 23,261 வாக்குகளை, 6.24% என்ற வீதத்தில் கோட்டா பெற்றிருக்கிறார். சஜித் பிரேமதாச, 312,722 வாக்குகளை, 83.86% என்ற வீதத்தில் பெற்றுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் 74,454 வாக்குகளை 21.85% என்ற வீதத்தில் மஹிந்த பெற்றிருந்தார். அப்போது மைத்திரி 253,574 வாக்குகளை 74.42% என்ற வீதத்தில் கைப்பற்றினார்.
இம்முறை கோட்டாபய களமிறங்க, பழசையெல்லாம் மறக்காமல் வைச்சு செய்துள்ளார்கள் மக்கள்.
சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் 6,845 வாக்குகளை, 1.84% என்ற வீதத்தில்கை கைப்பற்றியுள்ளார். ஆரியவன்ச திசாநாயக்க 6,790 வாக்குகளை 1.82% என்ற வீதத்தில் பெற்றுள்ளார்.