கோப்பாய் பாலத்தில் மோதிய ஹையேஸ்!

கோப்பாய் பாலத்தில் நேற்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது.

கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதிப் பெயர் பொறிக்கப்பட்ட மதில் கட்டில் மோதியுள்ளது.

இதன்போது பெயர் பொதிக்கப்பட்ட மதில் கட்டின் மேல்ப்பகுதி இடிந்து விழுந்ததுடன், வாகனும் சேதமடைந்துள்ளது. எவரும் காயமடையவில்லை.