கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இரண்டு பேர் கைது..!!

அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இரண்டு பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் இன்று மாலை 05 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் கல்முனை நகரில் இரவு 7 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை கூச்சலிட்ட இளைஞர்களால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.