இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் சடுதியாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க.
அவர் யார், எந்த கட்சி, தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லியுள்ளார் என்பதை அறியாமலேயே, யாழில் மூன்றாவது அதிக வாக்கை பெற்றவராகி விட்டார். அநுரகுமார திசாநாயக்க, சிவாஜிலிங்கம் இவர்களை கடந்து முன்னிலை பெற்றுள்ளார்.
எப்படி இந்த நிலையை எட்டினார்?
இப்பொழுதுதான் முடிவுகள் வந்து கொண்டிருப்பதால் அதை இப்பொழுது சரியாக சொல்ல முடியாது. ஆனால் ஒரு காரணத்தால் அவர் முன்னிலை பெற்றிருக்கலாமென கருதப்படுகிறது.
முதலாவது, அவரது சின்னம் கழுகு. அன்னப்பட்சிக்கும், கழுகிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவருக்கு புள்ளடியிருக்கலாமென கருதப்படுகிறது.