நாட்டின் ஏழாவது ஜனாதிபதியா தெரிவாகியுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மோதி இதனை பதிவிட்டுள்ளார்.
Congratulations @GotabayaR on your victory in the Presidential elections.
I look forward to working closely with you for deepening the close and fraternal ties between our two countries and citizens, and for peace, prosperity as well as security in our region.
— Narendra Modi (@narendramodi) November 17, 2019
அந்த பதிவில்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோதத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்கள். எமது இரு நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் இடையில் காணப்படும் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். அத்தோடு எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளோம்.
அதேபோன்று சீரான தேர்தலொன்றை வெற்றிகரமான நடத்தி முடித்திருப்பதையிட்டு இலங்கை மக்களனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.