இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் வசித்து வரும் 15 வயதாகும் மாணவியொருவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவர் நேற்று பள்ளியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியரிடம் இது குறித்து தெரிவிக்கவே., உடனடியாக ஆசிரியர்கள் மாணவியின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பிய நிலையில்., மாணவியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்த சமயத்தில்., ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மாணவி தனது உறவினரின் இல்லத்தில் நடைபெற்ற துயரத்தை கூறி கதறியழுதுள்ளார். இதனை அறிந்த ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளிக்கு வந்து உண்மையை அறிந்த மாணவியின் தாயார்., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்த காவல்துறையினரின் விசாரணையில்.,
தனது நாத்தனாருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில்., எனது மகளை அவருக்கு உதவியாக அனுப்பி வைத்தேன். இந்த தருணத்தில்., எனது நாத்தனார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்த எனது நாத்தனாரின் மகன் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதனால் மனதளவிலும் – உடலளவிலும் கடுமையாக அவர் பாதிக்கப்ட்டுள்ளார் என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.