ஸ்ரீ விகாரி ஆண்டு – கார்த்திகை 2 – திங்கட்கிழமை (18.11.2019)
நட்சத்திரம் : பூசம் இரவு 9.47 வரை பின்னர் ஆயில்யம்
திதி : சஷ்டி மாலை 4.04 வரை பின்னர் ஸப்தமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45
திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்
மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தள்ளி போன காரியங்கள் உடனே முடியும். வாகனத்தில் மிதவேகம் அவசியம். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் பெரியளவில் சந்தோஷம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். பால்ய நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கடக ராசி
கடக ராசி நேயர்களே, குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் அடக்கமும், நிதானமும் அவசியம்.
சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய தேவைகள் நிறைவேறும். சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவது நல்லது. புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். பழைய கடன்கள் பைசலாகும். தொழில் நிலை சிறப்படையும்.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி நேயர்களே, குடும்பத்தில் வழக்கமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ஆன்மீக ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்றிருந்த நிலை மாறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
மகர ராசி
மகர ராசி நேயர்களே, பொருளாதார நிலை கணிசமாக உயரும். ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் ராசி
கும்பம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். பெற்றோர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
மீன ராசி
மீன ராசி நேயர்களே, முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.