எல்கேஜி படம் எதிர்பாராமல் அதிகப்படியான வசூலை படைத்தது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்க போவதாக அறிவித்துள்ள படம்தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை எல்கேஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது.
இதில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆர் ஜே பாலாஜி உடன் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கின்றார். இதற்கு காரணம் அவர் எப்போதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிப்பது வழக்கம்.
கடந்த சில நாட்களாக இதில் சிறிது மாறுதல் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் அதே பார்முலா வுக்கு நயன்தாரா திரும்பியுள்ளார். அம்மன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 8 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாதாரணமாக நயன்தாரா 5 கோடி சம்பளம் தான் வாங்குவது வழக்கம். இந்நிலையில், பாலாஜியுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் மூன்று கோடியை அதிகப்படுத்தி இருக்கிறாராம். ஆர் ஜே பாலாஜி யும் படப்பிடிப்பு துவங்கும் வேலையை செய்து வருகிறாராம்.