கமல் பட்ட கஷ்டத்திற்கு முன் நான் கண்டக்டராக பட்ட கஷ்டம் ஒண்ணுமே இல்லை..!! ரஜினி

நடிகர் கமல்ஹாசனை பாராட்டி இன்று ஒரு பிரம்மாண்ட விழா நடந்துள்ளது. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினி உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர்.

மேடையில் நடிகர் ரஜினி பேசியபோது கமல் பட்ட கஷ்டம் பற்றி உருக்கமாக பேசினார். “கமல் பட்ட கஷ்டத்திற்கு முன் நான் கண்டக்டராக பட்ட கஷ்டம் ஒன்றுமே இல்லை. நான் மிடில் கிளாசில் பிறந்ததால் கஷ்டப்பட்டேன். ஆனால் கமல் பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் பார்பராக, டான்ஸ் அசிஸ்டெண்டாக இருந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இந்த உலகத்தில் வேறு யாரும் நடிப்பு, தயாரிப்பு, script writer, பாடகர், பாடலாசிரியர் என அனைத்து வேலைகளையும் செய்ததில்லை, 10 கேரக்டர்களில் நடித்ததில்லை, 60 வருடமாக யாரும் நடித்ததில்லை. அதனால் தான் கமல் உலகநாயகன் என ரஜினி கூறினார்.

“அவர் பேசுறது புரியலனு சொல்றாங்க. தூங்குறவன எழுப்பலாம், தூங்குறமாதிரி நடிக்கிறவன?” என கேட்டுள்ளார் ரஜினி.

மேலும் பேசிய அவர் எங்க நட்பை யாராலயும் உடைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.