நடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் விஜய் சேதுபதி

விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் தன் படங்களுக்காக கதையை மிக கவனமாக கேட்டு தேர்வு செய்கிறார்.

அவருக்காக எழுதப்பட்ட மாஸான கதையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ளார். சங்கத்தமிழன் படம் தான் அது. இந்த தகவலை இயக்குனர் விஜய் சந்தர் தான் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பவண் கல்யாண் மற்றும் தமிழில் விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இது. பின்னர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என முடிவான பிறகும் ஒரு சில வசனங்கள் தவிர வேறு எதுவும் மாற்றவில்லை என தெரிவித்துள்ளார் இயக்குனர்.