அட்லீ-ஷாருக் படம் எப்போது துவங்கும்? பாலிவுட் மீடியாகளில் வெளியான தகவல்

மெர்சல் படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜய்யை இயக்கிய அட்லீ பிகில் படத்திலும் பிரம்மாண்ட வெற்றியை கண்டுள்ளார். அடுத்து அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இன்னும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது பாலிவுட் மீடியாவில் இந்த படம் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் துவங்குகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.