தமிழ் சினிமாவில் தற்போது அதிகமளவில் மக்களால் கவரப்பட்டு வருவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சீரியல்களும் தான். சீரியல் மூலம் நடித்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என்று வயதான நடிகைகளும் சீரியல் பக்கம் திரும்புகிறார்கள்.
தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு வரும் ரோஜா என்ற சீரியல் தற்போது பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை பிரியங்கா. இவரது திருமணம் குறித்த பிரச்சனைகளை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
நானும் என்னுடைய காதலன் ராகுலும் காதலித்து வந்தோம். கடந்த வருடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டது.
இதுமேலும் இருவருக்கும் மனஷ்தாபங்கள் ஏற்பட்டு பிரிந்தோம், ராகுலும் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என கூறியுள்ளார். அவரிடன் பேச பல முயற்சிகள் எடுத்தும் என்னால் சென்று பேசமுடியவில்லை என்று கூறியுள்ளார்.