தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. சிறு கதாபாத்திரம் கிடைத்தால் அதில் நடித்து வளர்ந்துவிடலாம் என்று பலபேர் சினிமாத்துறைக்கு வருவார்கள். அதில் முக்கியமானவர் தான் நடிகை யுவராணி. அழகன் படத்தில் மூலம் 90களில் இளம்நடிகையாக இருந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தவர்.
ஹீரோயின் வாய்ப்புகள் மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற கதாபாத்திர படங்களை நிராகரித்தார். இதில் சூப்பர் ஸ்டார் படத்தினையும் நிராகரித்தது பற்றி ஓப்பனாக சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் உதவியாளர் ஒருபர் பாஷா படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார். ஆனால் அதற்கு நான் வேண்டாம். தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் என் மார்க்கெட் போய்விடும் என்று நிராகரித்து கூறினேன்.
சில தினங்களில் விஜய் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ரஜினி சார் மொபைலில் இருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்க முடியாது சொன்ன ஏன் என்று கேட்டார். அதற்கான காரணத்தை கூறினேன். அவர் என்னை நம்பி நடித்தால் நல்லதாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதும் நடித்து கொடுத்தேன். அதன்பின் புகழும், மரியாதையும் சினிமாவில் அதிகமாகி இந்த நிலையில் இருக்கிறேன் என்று கூறினார்.