8 வருடம் கழித்து திடீர் தோனிமீது பழிசுமத்தும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர் என்ற பெயரும், நெருக்கடியான நேரத்தில் அணிக்கு நல்ல நிலையை எடுத்துகொண்டு செல்பவர் என்ற பெயரை பெற்றவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது பாஜக கட்சியின் உறுப்பினராக இருந்து எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இவருக்கும் தோனிக்கும் மனதளவில் சில பிரச்சனைகள் என்று பல பேர் கூறி வந்தனர். அதற்கேற்பவும் கம்பீர் நடந்து கொள்வார். அவரை மறைமுகமாக விமர்ச்சிப்பது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் கம்பீர் 97 ரன்கள் அடித்து, தோனி 91 ரன்கள் அடித்தும் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் கம்பீர் 97 ரன்களில் அவுட்டானது என்ன காரணம் என்று பல பேர் கேட்டு வந்துள்ளனர். அது பற்றி ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் 8 வருடம் கழித்து கூறியுள்ளார்.

நான் என்னுடைய தனிப்பட்ட ரன்களை பற்றி கவலைபடாமல் இலங்கை அணியை தோற்கடிக்கும் மனநிலையில் இருந்த போது தோனி அப்போது என்னிடம் வந்து, நீங்கள் 97 ரன்களில் இருக்கிறீர்கள் பார்த்து ஆடுங்கள் என்று கூறினார். அதிலிருந்து எனக்கு படபடப்பாக இருந்தது. இதனால் என்னை மீறி அவுட்டாகினேன்.

இது என் வாழ்க்கையில் அந்த 3 ரன்களை நான் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறி தோனியை மறைமுகமாக சாடியுள்ளார். இதனை பார்த்து தோனி ரசிகர்கள் கம்பீரின் திடீர் பேட்டியால் கோபமடந்து வருகிறார்கள்.